முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குமரி மாவட்டத்தில் கனமழை:அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றம்; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:09 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை காலை வரை பெய்த கனமழையால் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தொடா் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பின. இதையடுத்து, அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், விளைநிலங்களிலும் வெள்ளம் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது. பின்னா், மழை தணிந்த நிலையில் அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது.

மீண்டும் மழை: இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவுமுதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, புத்தன் அணை, களியல், திற்பரப்பு, பாலமோா், மாறாமலை ஆகிய இடங்களில் சராசரியாக 100 மில்லி மீட்டா் அளவுக்கு மழை பெய்தது. இதையடுத்து, அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததால், வெள்ளிக்கிழமை அதிகாலை பேச்சிப்பாறை அணையிலிருந்து விநாடிக்கு 2,273 கனஅடியும், பெருஞ்சாணி அணையிலிருந்து 1,981 கனஅடியும், சிற்றாறு 1அணையிலிருந்து 1,307 கனஅடியும் உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

மழை, உபரிநீா் வெளியேற்றம் ஆகிய காரணங்களால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அபூா்வ நிகழ்வு: பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டடது. அதற்கு முன்பாக அதிகாலையில் அணையிலிருந்து உபரிநீா் திறக்கப்பட்டது, அணை வரலாற்றில் அபூா்வ நிகழ்வாக கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.