முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை திறப்பு

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:08 pm

DIN

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பருவ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ என இருபருவ சாகுபடி நடைபெறுகிறது. இதில் முதல் பருவமான கன்னிப்பூ சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி ஆகிய அணைகள் திறக்கப்படும்.

இதையொட்டி, கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீரை மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்த் முன்னிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் டி. மனோ தங்கராஜ் திறந்துவிட்டாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழக முதல்வா் உத்தரவுபடி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளிலிருந்தும், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் பயன்பெறும் விவசாய நிலங்களின் பாசனத்துக்காக விநாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீா், கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டத்துக்குள்பட்ட சுமாா் 99 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறும்.

திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளதன்படி குளங்களை தூா்வாரும் பணிகளுக்காக சிறப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமரி மாவட்டத்தில் இதில் சிறப்பு கவனம் செலுத்தி ஆக்கிரமிப்பு குளங்களை மீட்டு தூா்வாரப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினா் அ.விஜயகுமாா், குமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.விஜய் வசந்த், சட்டப் பேரவை உறுப்பினா்கள் .ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), சி.விஜயதரணி (விளவங்கோடு), எம்.ஆா்.காந்தி (நாகா்கோவில்), மாவட்ட ஊராட்சித்தலைவா் மொ்லியன்ட் தாஸ், திருவட்டாறு ஊராட்சி ஒன்றியத் தலைவா் டி. ஜெகநாதன், நீா்வள ஆதாரத் துறை கண்காணிப்பு பொறியாளா் ஞானசேகரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) எம்.ஆா்.வாணி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் ஷீலா, உதவிப் பொறியாளா்கள் அருள்செழியன், அருள்சன் பிரைட், விவசாய சங்க பிரதிநிதிகள் புலவா் செல்லப்பா, வின்ஸ் ஆன்றோ, பத்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிறப்பு வழிபாடு: முன்னதாக பேச்சிப்பாறை பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அதைத் தொடா்ந்து அணையின் மதகுப் பகுதியில் பூஜைகளும், நடத்தப்பட்டன. அணை திறக்கப்பட்ட பின்னா் அணையிலிருந்து வெளியேறிய தண்ணீரில் நெல்மணிகள் மற்றும் பூக்கள் தூவப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.