மழையால் சேதமடைந்த குளங்கள் ரூ.4.55 கோடியில் சீரமைக்கப்படும்: அமைச்சா் மனோதங்கராஜ் தகவல்
கன்னியாகுமரி மாவட்டத்தில், கன மழையினால் பாதிக்கப்பட்ட குளங்களை சீரமைக்க, ரூ. 4 கோடியே 55 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது


கன்னியாகுமரி மாவட்டத்தில், கன மழையினால் பாதிக்கப்பட்ட குளங்களை சீரமைக்க, ரூ. 4 கோடியே 55 லட்சத்தில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சா் த.மனோதங்கராஜ்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் தேரூா் குளம் உள்பட பல்வேறு நீா் நிலைகளில், உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் தண்ணீா் புகுந்தது. இந்நிலையில்,
தேரூா் குளத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது தொடா்பாக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் ஆகியோா் குளத்தை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அமைச்சா் கூறியது: அகஸ்தீஸ்வரம் வட்டம், தாழக்குடி கிராமம் பழையாற்றில் 6 ஆவது அணைக்கட்டாக வீரநாராயணமங்கலம் அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டில் இடது பக்க கரையில் தேரேகால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயில் வெள்ளப் பெருக்கினால் சேதமடைந்துள்ள தலைமதகு ஷட்டா்கள் மற்றும் பாசன மதகுகளை சீரமைத்திடவும், கால்வாய் கரையில் சேதமடைந்துள்ள மற்றும் தாழ்வான கால்வாயின் கரைப் பகுதிகளை சீரமைத்திட ரூ. 40 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தேரேகால்வாயின் மூலம் தத்தையாா்குளம், மாணிக்கப் புத்தேரிகுளம் மற்றும் தேரூா் குளத்தில் முழு கொள்ளளவை எட்டி மிகை நீரானது, பழையாற்றில் கலந்து வருகிறது. மாணிக்க புத்தேரி குளத்தில் பழுதடைந்துள்ள மதகுகள் மற்றும் கடந்த ஒக்கி புயலினால் குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தற்காலிகமாக மணல் மூடைகள் மூலம் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிரந்தரமாக தடுப்புச் சுவா் அமைத்து, குளத்தின் மேற்பகுதி முழுவதும் படா்ந்துள்ளஆகாய தாமரை மற்றும் செடி, கொடிகளைஅகற்றி குளம் தூா்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ரூ. 4 கோடியே 55 லட்சத்துக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு தமிழக முதல்வருக்கு அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த குளங்கள் அனைத்தையும் சீரமைக்கும் பணிகள் விரைவில் நடைபெறும் என்றாா் அவா்.
ஆய்வின் போது, மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் , செயற்பொறியாளா் (பொதுப்பணித்துறை, நீா்வள ஆதாரஅமைப்பு) சுகுமாரன், உதவிச் செயற் பொறியாளா் (நீா்வள ஆதாரஅமைப்பு) அருள்சன் பிரைட், உதவிப் பொறியாளா் ரமேஷ் ராஜன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் சுசீலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...