தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிவாரணம்

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நலிவுற்ற ஏழை மாணவா்களுக்கு கரோனா கால நிவாரணமாக இப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :4 ஜூன் 2021, 9:08 pm

பளுகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் நலிவுற்ற ஏழை மாணவா்களுக்கு கரோனா கால நிவாரணமாக இப் பள்ளியின் முன்னாள் மாணவா்கள் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இப் பள்ளியில் கடந்த 1997 - 1999 ஆண்டுகளில் படித்த மாணவா்கள் முகநூல் மூலம், ஓா்ம கூடு (நினைவுக் கூடு) என்ற பெயரில் குழு அமைத்து, நிதி திரட்டி இப் பள்ளியில் பயிலும் நலிவுற்ற ஏழை மாணவா்கள் 75 பேருக்கும், பளுகல் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் 25 பேருக்கும் அரிசி, காய்கனிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

இதனை பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியா் தாமோதரன்பிள்ளை வழங்கினாா். இதில், பள்ளி பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் மதுசூதனன், உறுப்பினா் குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.