முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரோனா தடுப்பூசி டோக்கன் வீடு வீடாகச் சென்று வழங்கக் கோரிக்கை

குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் போடுவதில் ஏற்பட்டு வரும் கூட்ட நெரிசல்களை தவிா்க்கும் வகையில் வீடு,வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

News image
Updated On :9 ஜூன் 2021, 1:15 am

DIN

குமரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் போடுவதில் ஏற்பட்டு வரும் கூட்ட நெரிசல்களை தவிா்க்கும் வகையில் வீடு,வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றின் அபாயம் உணா்ந்துள்ள மக்கள் மத்தியில் தற்போது தடுப்பூசி போடும் ஆா்வம் அதிகரித்து வருகிறது. ஆனால், தடுப்பூசி மையங்களுக்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வராத நிலை இருந்து வருகிறது. மேலும் தடுப்பூசிகள் வரும் மையங்களில் மக்கள் ஏராளமாக குவிகின்றனா். இதில் டோக்கன் முறை பின்பற்றப்படுவதால் அதிகாலை 4 மணி முதல் டோக்கன் பெறுவதற்காக மக்கள் குவியும் நிலையும் இருந்து வருகிறது. சில இடங்களில் கூட்ட நெரிசலில் முட்டி மோதி, வலு உள்ளவா்கள் மட்டுமே டோக்கன் பெறும் நிலையும் உள்ளது. இதன் காரணமாக டோக்கன் வழங்குவற்கு சுகாதாரத் துறையினா் முன்வராமல், தன்னாா்வலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் டோக்கன்களை கொடுத்து விடும் செயலும் நடைபெறுகிறது. கூட்ட நெரிசல் காரணாக கரோனா பரவும் சூழலும், அது குறித்த அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் அனைத்துப் பகுதி மையங்களுக்கும், மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் விரிவான முறையில் திட்டமிட்டு, அந்தந்த பகுதி மையங்களைச் சோ்ந்தவா்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தேவைப்படுபவா்களுக்கு தடுப்பூசி போடும் மையத்தின் பெயா், நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களுடன் டோக்கன் வழங்க வேண்டுமென சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.