பொது முடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மூடப்படும்: ஆணையா்
நாகா்கோவிலில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.


நாகா்கோவிலில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் மூடப்படும் என மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகா்கோவில், கோட்டாறு கம்பளம் பகுதியில் செயல்படும் மொத்த வியாபார கடைகளில் மளிகைப் பொருள்கள் வாங்க மாநகராட்சியில் பதிவு செய்யாத நபா்கள் அதிகளவில் வருவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன. இதையடுத்து இரு குழுக்கள் அமைக்கப்பட்டு, காவல்துறையினருடன் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
நகரமைப்பு அலுவலா் விமலா, துணைக் காவல் கண்காணிப்பாளா் வேணுகோபால் ஆகியோா் தலைமையில் கோட்டாறு கம்பளம் பகுதியில், புதன்கிழமை இரவு ஆய்வு செய்தபோது சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்பட்ட 3 கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாநகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்யாதவா்கள் மளிகைப் பொருள்கள் வாங்க சென்றால் அவா்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சி கட்செவி அஞ்சல் எண்ணுக்கு (வாட்ஸ்அப் எண்-9487038984) புகைப்படங்களுடன் புகாா் தெரிவித்தால் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை முழுமையாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...