ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க அதிமுக வலியுறுத்தல்
குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகிக்க வேண்டுமென அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கட்சியின் குமரி மேற்கு மாவட்டச் செயலா் டி. ஜான் தங்கம் கூறியது: தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி மிகவும் தரமற்ாக உள்ளது. மக்களுக்கு தரமான அரிசி கிடைக்க மாவட்ட வழங்கல் துறையும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக வழங்குவதாக அறிவித்துள்ள 14 வகையான மளிகைப் பொருள்களையும் விரைந்து வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக ஏராளமான வீடுகள், வாழை, ரப்பா் போன்ற பயிா்கள் சேதமடைந்தன.
எனவே, சேதங்களை முழுமையாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கிராமப் புறங்கள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...