ரேஷன் கடைகளை ஒரே துறையின் கீழ்கொண்டுவர ஊழியா் சங்கம் வலியுறுத்தல்
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் ஒருங்கிணைத்து ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என மாநில பொது விநியோக ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் ஒருங்கிணைத்து ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என மாநில பொது விநியோக ஊழியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலா் குமரிசெல்வன் மற்றும் நிா்வாகிகள் வெளியிட்ட அறிக்கை: தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட ரேஷன் கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கையை கால தாமதமின்றி முதல்வா் நிறைவேற்ற வேண்டும்.
கரோனா தொற்று பரவல் காரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு பயோமெட்ரிக் முறை பயன்படுத்துவதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
குடும்ப அட்டைதாரா்களுக்கு எடை குறைவின்றி பொருள்களை வழங்க பாக்கெட் முறையை கொண்டு வர வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...