‘கரோனா அறிகுறி இருந்தால் சுய மருத்துவம் வேண்டாம்’
கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் சுய மருத்துவம் செய்யாமல், மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்


கரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் சுய மருத்துவம் செய்யாமல், மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், மகளிா் வளா்ச்சி திட்ட மேலாண்மை இயக்குநருமான பா.ஜோதிநிா்மலாசாமி.
குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: கரோனா 2 ஆவது அலையின் அறிகுறிகள் குறித்த விழிப்புணா்வு இல்லாமல் பொதுமக்கள் கரோனா பரிசோதனையை தவிா்த்து வருகின்றனா். இதனால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு, ஓரிரண்டு நாள்களிலேயே ஆபத்தான கட்டத்தை அடைந்து உயிரிழப்பு தவிா்க்க இயலாததாகி விடுகிறது.
தற்போது, சளி, காய்ச்சல், உடல் வலி, தலைபாரம், இருமல், தொண்டைவலி, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளோடு வயிற்றுப் போக்கு, சுவை இழத்தல், முகரும் தன்மை இழத்தல் ஆகிய அறிகுறிகளும் உள்ளன.
இதில் ஏதேனும் அறிகுறி தென்பட்டால் பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சுயமருத்துவம் வேண்டாம்.
இம் மாவட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காக ஜ்ஜ்ஜ்.ந்ன்ம்ஹழ்ண்ஸ்ரீா்ஸ்ண்க்ஸ்ரீஹழ்ங்.ண்ய் என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில், மாவட்டத்தில் செயல்படும் கரோனா தடுப்பூசி மையங்கள், மாதிரி சேகரிப்பு மையங்கள், வீட்டுக்கு அருகே உள்ள மையங்களை எளிதாக அறிந்து கொள்ள வரைபடங்கள் உள்ளிட்ட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் முன்னிலை வகித்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரிநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சுகந்திராஜகுமாரி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் எ.பிரகலாதன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மா.வீராசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...