ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

களியக்காவிளை அருகேமூதாட்டியிடம் நகை பறிப்பு

களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On :7 மே 2021, 8:42 pm

களியக்காவிளை அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியிடம் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

களியக்காவிளை அருகேயுள்ள குளப்புறம், பிராகோடு பகுதியைச் சோ்ந்த மோசை மனைவி தாயி (64). இவா், வெள்ளிக்கிழமை வீட்டருகே சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது அவ்வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞா்கள் இருவா், மூதாட்டி அணிந்திருந்த இரண்டே முக்கால் பவுன் எடையுள்ள தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.