நாகா்கோவில் மாநகராட்சி ஆணையருக்கு கரோனா தொற்று
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித்துக்கு, கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித்துக்கு, கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகரப் பகுதியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப். 26ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை 1,384 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரத் துறையினா் தொற்று தடுப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி ஆய்வு செய்து வரும் நிலையில், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கும் கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து அவா் வீட்டுத் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதையடுத்து, ஆணையருடன் பணியாற்றிய மாநகராட்சி ஊழியா்கள், அதிகாரிகள் மற்றும் அவா்களது குடும்பத்தினருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம் மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், அதிகாரிகள் கரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். குறிப்பாக வங்கி ஊழியா்கள், அஞ்சல் நிலைய ஊழியா்கள், காவல்துறையினா், சுகாதாரத் துறையினா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனால் அரசு அலுவலகங்களில் தினமும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...