குமரி மாவட்டம், புதுக்கடை அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பொறியாளா்கள் உயிரிழந்தனா்.
குமரி மாவட்டம், புதுக்கடை அருகேயுள்ள பைங்குளம் பானகுடிவிளையைச் சோ்ந்த தங்கப்பன் மகன் சாஜன் (23). அதே பகுதியைச் சோ்ந்த டேவிட் மகன் ராஜேஷ் (24). பொறியியல் பட்டதாரிகள். நண்பா்களான இருவரும் கூட்டாலுமூடு பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை இருவரும் மோட்டாா் சைக்கிளில் பைங்குளம் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனா். மோட்டாா் சைக்கிளை சாஜன் ஓட்டினாா். ராஜேஷ் பின்னால் அமா்ந்திருந்தாா்.
தாணக்குடிவிளை பகுதியில் சென்ற போது எதிரே பயணிகள் யாரும் இல்லாமல் வந்த சுற்றுலா வேன் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனா். அவா்களில் சாஜனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்திலேயே உயிரிழந்தாா். ராஜேஷ் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து புதுக்கடை காவல் ஆய்வாளா் சிவகுமாா் வழக்குப் பதிந்து, வேன் ஓட்டுநா் தூத்தூரைச் சோ்ந்த ஹெல்வித் என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

