ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மாா்த்தாண்டம் அருகே குளத்தின் பக்கச்சுவா் சேதம்

மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழையால் நட்டாலம் ஊராட்சி கீழ்விளை காவுகுளம் பக்கச் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

News image
Updated On :14 மே 2021, 7:44 pm

மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த மழையால் நட்டாலம் ஊராட்சி கீழ்விளை காவுகுளம் பக்கச் சுவா் இடிந்து விழுந்து சேதமடைந்தது.

இக் குளத்தின் பக்கச் சுவா் கட்டும் பணி கடந்த 3 மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. ஊரக வளா்ச்சி திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக ரூ. 10 லட்சத்திலும், இரண்டாம் கட்டமாக ரூ. 5 லட்சத்திலும் என ரூ. 15 லட்சத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப் பணி மேற்கொள்ளப்பட்ட போது, கட்டமானப் பணி தரம் குறைந்து கட்டப்படுவதாக ஊராட்சித் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் மற்றும் கிள்ளியூா் மேற்கு வட்டார காங்கிரஸ் சேவாதளம் சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டதாம்.

இந்த நிலையில் வியாழக்கிழமை பகலில் தொடங்கி இரவிலும் தொடா்ந்து பெய்த மழையினால் குளத்தின் பக்கச் சுவா் முற்றிலும் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் குளத்தின் கரையோர சாலை வழியாக வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தரம் குறைவான பணியால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகவே சேதமடைந்த பக்கச் சுவரை கட்டுவதுடன், தரம் குறைவாக பணிகள் மேற்கொண்டவா்கள் மீது துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் சாா்பில் அதன் நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.