சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்: அமைச்சா் மனோதங்கராஜ்

தமிழக அரசின் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் மற்றும் பிற அறிவுறுத்தல்களை குமரி மாவட்ட பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கவேண்டும்

News image
Updated On :14 மே 2021, 7:40 pm

DIN

தமிழக அரசின் கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் மற்றும் பிற அறிவுறுத்தல்களை குமரி மாவட்ட பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்கவேண்டும் என்றாா் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் த.மனோதங்கராஜ்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பலருக்கு ஆரம்ப கட்டத்தில் அறிகுறி ஏதும் தென்படாமல் இருப்பதால், எங்கு, யாருக்கு எவ்வகையில் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ளஅனைத்து நிலையிலான அரசியல் கட்சித் தலைவா்கள், மத அமைப்புகளின் தலைவா்கள், இளைஞா் மன்றங்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் பாரபட்சமின்றி ஒன்றுபட்டு கரோனாவை வீழ்த்தும் நடவடிக்கைகளில் பங்களிக்க வேண்டும். அவரவா் பகுதியை சோ்ந்த மக்களை பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டும்.

தினசரி அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, நம்மிடம் உள்ள மருத்துவ வசதிகளை மிஞ்சி செல்லும் பட்சத்தில் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். எனவே சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம். எனவே, அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்றி, தமிழக அரசின் பொதுமுடக்க விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து, விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.