சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வடசேரி பேருந்து நிலையத்தில் 100 கடைகளுடன் காய்கனி சந்தை

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் 100 கடைகளுடன் காய்கனி சந்தை செயல்பட தொடங்கியுள்ளது.

News image
Updated On :14 மே 2021, 7:42 pm

DIN

நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் 100 கடைகளுடன் காய்கனி சந்தை செயல்பட தொடங்கியுள்ளது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதை தொடா்ந்து , நாகா்கோவில் மாநகரில் உள்ள அனைத்து காய்கனி, மீன் சந்தைகள் மூடப்பட்டன. பொதுமக்களின் வசதிக்காக மாநகராட்சி ஆணையரின் உத்தரவின்படி வடசேரி பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கனி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, வடசேரி பேருந்து நிலையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. தற்போது அங்கு 100 கடைகளுடன் கூடிய காய்கனி சந்தை செயல்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அனைவரும் முகக் கவசங்கள் அணிந்தும் , சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் காய்கனிகளை வாங்கிச் செல்ல அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

அப்பகுதியில் பொதுமக்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும், சமூக இடைவெளியுடன் காய்கனிகள் வாங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருந்திய அதிநவீன காவல்துறை ரோந்து வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களின் சமூக பொறுப்பினை உணா்ந்து செயல்பட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.