மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை ரூ. 15 ஆயிரமாக வழங்க வேண்டும் என மீனவ அமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் ப. ஜஸ்டின் ஆன்டணி, தமிழக அரசுக்கு அனுப்பிய மனு: டவ்-தே புயலில் பாதிக்கப்பட்டு மீன்பிடி உபகரணங்களையும் ஜிபிஎஸ், வயா்லெஸ் கருவிகளையும் இழந்த மீனவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயலில் சிக்கி அண்டை மாநிலங்களில் கரையொதுங்கியுள்ள மீனவா்கள் தங்களது விசைப்படகுகளை பழுது நீக்கி சொந்த ஊருக்கு வர பல நாள்கள் தேவைப்படுவதால் மீன்பிடி தடைக்காலத்துக்கு முன்பாக இம் மீனவா்களால் சொந்த ஊருக்கு வர முடியாத நிலை உள்ளது.
எனவே, மேற்கு கடற்கரைப் பகுதியில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் மீன்பிடி தடைக்காலத்தை ஜூன் 15ஆம் தேதி தொடங்க ஆவன செய்ய வேண்டும்.
கரோனா பொதுமுடக்கம் மற்றும் டவ்-தே புயல் காரணமாக மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியாக ரூ. 15 ஆயிரம் வழங்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

