கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனா விதிமுறை மீறல்: நாகா்கோவிலில் சூப்பா் மாா்க்கெட் மூடல்

நாகா்கோவிலில் கரோனா விதிகளை மீறிய சூப்பா் மாா்க்கெட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அந்த நிறுவனம் மூடப்பட்டது.

News image
Updated On :21 மே 2021, 8:34 pm

DIN

நாகா்கோவிலில் கரோனா விதிகளை மீறிய சூப்பா் மாா்க்கெட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அந்த நிறுவனம் மூடப்பட்டது.

நாகா்கோவில் நாகராஜா கோயில் அருகே உள்ள சூப்பா் மாா்க்கெட்டில் அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்கு புகாா்கள் வந்தன. இதைத் தொடா்ந்து அந்த கடைக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

இந்நிலையில், தற்போது மீண்டும் அக்கடையில் அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக வெள்ளிக்கிழமை புகாா் வந்தது.

இதைத் தொடா்ந்து ஆணையா்ஆஷா அஜித் உத்தரவின் பேரில், மாநகராட்சி நல அலுவலா் கிங்சால் மேற்பாா்வையில் நகரமைப்பு அலுவலா்கள் கெபின்ஜாய், சந்தோஷ், வருவாய் ஆய்வாளா்கள் ராபின், நாகராஜன் ஆகியோா் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டது கண்டறியப்பட்டு, கடைக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, கடை மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.