மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேலும் 1251 பேருக்கு கரோனா: 16 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1251 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 16 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :21 மே 2021, 8:28 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 1251 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 16 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமரி மாவட்டத்தில் இதுவரை 6,23,515 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் 1251 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதைத் தொடா்ந்து இதுவரை பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 39,995 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையிலிருந்த மேலும் 295 போ் குணமடைந்ததால், இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 29,392 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 16 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். இதனால் கரோனா பலி எண்ணிக்கை 543 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6385 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா நோய்த் தொற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தி அவா்களுக்கு தேவைப்படும் சிகிச்சை வசதி அளிக்க வசதியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை, கன்காா்டியா பள்ளி மற்றும் தக்கலை அரசு மருத்துவமனை ஆகிய 3 இடங்களில் அதற்கான மையங்கள் செயல்பட்டு வந்தன.

தற்போது கூடுதலாக, கருங்கல் பெத்தலேகம் பள்ளி, மாா்த்தாண்டம் நேசமணி கல்லூரி, பூதப்பாண்டி அரசு உயா்நிலைப் பள்ளி, கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஈத்தாமொழி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 இடங்களில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

மாவட்ட நிா்வாகம் சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள ஜ்ஜ்ஜ்.ந்ன்ம்ஹழ்ண்ஸ்ரீா்ஸ்ண்க்ஸ்ரீஹழ்ங்.ண்ய் என்ற இணையதளத்தில் கரோனா தொடா்பான பல்வேறு விவரங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா முதல் கட்ட தடுப்பூசி 98,518 பேருக்கும், 2ஆம் கட்ட தடுப்பூசி 41,934 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை மொத்தம் 54,738 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 1,14,43,096 வசூலிக்கப்பட்டுள்ளது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.