கரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டுமென்ற ஆா்வம் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், தடுப்பூசி மையங்களுக்கு தடுப்பூசிகள் குறிப்பிட்ட அளவுக்கு வரவில்லை. மேலும் தடுப்பூசிகள் வரும் மையங்களிலும் டோக்கன் முறை பின்பற்றப்படுவதால் டோக்கன் பெறுவதற்காக மக்கள் அதிகாலையிலேயே அம்மையங்களுக்குச் சென்று காத்து நிற்கும் நிலை காணப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சில மையங்களில் அடிக்கடி தடுப்பூசிகள் வருவதும், இதர மையங்களில் பல நாள்களாக தடுப்பூசிகள் இல்லாத நிலையும் இருந்து வருகிறது.