ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கூட்டாலுமூடு பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாம்

புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மே 2021, 8:23 pm

புதுக்கடை அருகே கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்சிறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இம் முகாமில் 18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை பள்ளித் தாளாளா் சந்திரகுமாா் தொடங்கி வைத்தாா். பைங்குளம் ஊராட்சித் தலைவா் விஜயராணி முன்னிலை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா்கள் ராஜேஷ்குமாா், மனோஜ்குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சதீஸ் ஆகியோரின் மேற்பாா்வையில் செவிலியா்கள், தடுப்பூசி போடும் பணியினை மேற்கொண்டனா். இம் முகாமில் 150 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.