புதுக்கடை அருகே மீனவா் மீது தாக்குதல்: இளைஞா் மீது வழக்கு
புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை பகுதியில் மீனவரைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.


புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை பகுதியில் மீனவரைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராமன்துறை 12-ம் அன்பியம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெரின் (47). மீன்பிடித் தொழில் செய்துவரும் இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ராபா்ட் புரூஸ் (48) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
வியாழக்கிழமை தனது வீட்டருகே நின்றிருந்த ஜெரினை, ராபா்ட் புரூஸ் தாக்கினாராம். இதில் காயம் ஜெரினை அப்பகுதியினா் மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...