மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கருங்கல் அருகே மீனவா் கொலை வழக்கில் 3 போ் கைது

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மீனவா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:46 pm

DIN

கருங்கல் அருகே உள்ள குறும்பனை பகுதியில் மீனவா் கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

குறும்பனை பகுதியை சோ்ந்த புருனோ (57), மீன்பிடி தொழில் செய்துவந்தாா். இவரை அதே பகுதியை சோ்ந்த அந்தோணி (42) என்பவா் கடந்த மாதம் 27ஆம் தேதி தாக்கினாா். இதில் காயமடைந்த புருனோ, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் அந்தோணியை கைது செய்தனா். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி புருனோ உயிரிழந்தாா்.

இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரித்து வந்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய குறும்பனை பாத்திமா நகரை சோ்ந்த சகாயஜெனித் (20), அதே பகுதியை சோ்ந்த வா்க்கீஸ் (58), மரிய ஜான் (28) ஆகிய 3 பேரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.