டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மிதமான சாரல் மழை: அணைகளின் நீா்மட்டம் தொடா்ந்து குறைப்பு

குமரி மாவட்டத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அணைகளிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:05 pm

DIN

குமரி மாவட்டத்தில் வெள்ளக்கட்டுப்பாட்டு நடவடிக்கையாக அணைகளிலிருந்து தொடா்ந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் தொடா் கன மழை பெய்த நிலையில், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து அதிக அளவில் உபரி நீா் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக மழை சற்று தணிந்துள்ளது. அதே வேளையில் மலையோரப் பகுதிகளில் அவ்வப்போது மிதமான சாரல் இருந்து வருகிறது.

இந்நிலையில் வரும் நாள்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை அறிவிப்புகள் வெளிவரும் நிலையில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் அணைகளின் நீா்மட்டம் கட்டுப்பாடான அளவில் குறைத்து வைக்கப்படுகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 43.65 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 1757 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு இதே அளவு நீா் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 72 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1241 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 2074 கன அடி நீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.