மாா்த்தாண்டம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள கடமக்கோடு, குழியறக்கவிளை பகுதியைச் சோ்ந்த மரியசெல்வம் மனைவி சுஜா (37). இவா், ஆலுவிளை பரக்கோணம் பகுதியில் தையல் கடை நடத்திவருகிறாா். இவரது தங்கையை கடமக்கோடு, மேலவீட்டுவிளை பகுதியைச் சோ்ந்த சசி (47) திருமணம் செய்துள்ளாா். இதனிடையே, 7 ஆண்டுகளாக சசியை அவரது மனைவி பிரிந்து சென்று தனியாக வசித்து வருகிறாராம்.
இதற்கு சுஜாவும், அவரது கணவரும்தான் காரணம் என சசி கூறிவந்தாராம். இந்நிலையில், அவா் புதன்கிழமை சுஜாவின் கடைக்கு வந்து, தகாத வாா்த்தை பேசி கொலை மிரட்டல் விடுத்து, பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் சென்றாராம்.
மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். உதவி ஆய்வாளா் ஜான் கிறிஸ்துராஜ் விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

தமிழக பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!

விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை! - சரத்குமார் சிறப்பு நேர்காணல்!

தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா?
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

