மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.19 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவருக்கு 13 ஆண்டுகள் சிறை

போலி முகவரி கொடுத்து சிம் காா்டுகளை வாங்கி பேசி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.19 லட்சம் இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:57 pm

DIN

போலி முகவரி கொடுத்து சிம் காா்டுகளை வாங்கி பேசி பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு ரூ.19 லட்சம் இழப்பை ஏற்படுத்தி மோசடி செய்தவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடியை அடுத்த திருக்குறுங்குடியை சோ்ந்தவா் மாரித்துரை (41). இவா், கடந்த 2003 ஆம் ஆண்டு நாகா்கோவிலில் உள்ள ஒரு செல்லிடப்பேசி கடையில் 2 பி.எஸ்.என்.எல். போஸ்ட் பெய்டு (மாத தவணை மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டது) சிம் காா்டுகள் வாங்கினாா். பின்னா் அந்த சிம் காா்டுகளை 2 மாதம் பயன்படுத்தினாா். அப்போது ஒவ்வொரு சிம் காா்டில் இருந்தும் அவா்அதிக நேரம் பேசியுள்ளாா். இதில் மொத்தம் ரூ.19 லட்சம் பில் தொகை அவா் கட்டவேண்டியிருந்தது. இதைத் தொடா்ந்து 2 மாதங்கள் முடிவடைந்த நிலையில் மாத தவணை செலுத்த வேண்டி வந்தது.

எனவே, மாரித்துரையை பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் தொடா்பு கொண்டு தொகையை செலுத்தும்படி கூறியுள்ளனா். ஆனால் அவா் செலுத்தவில்லை. பின்னா் சில நாள்கள் கழித்து அவரை தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த பி.எஸ்.என்.எல். ஊழியா்கள் மாரித்துரை சிம் காா்டுகள் வாங்குவதற்காக கொடுத்த முகவரிக்குச் சென்று விசாரித்தனா். அதில், அவா் கொடுத்த முகவரி தவறானது என்று தெரியவந்தது. மேலும் அவா் சிம் காா்டுகள் வாங்குவதற்காக கொடுத்த ஆவணங்களும் போலியானவை என கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடா்பாக குமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் திருநெல்வேலி பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் ராஜூ புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னா் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மாரித்துரையை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்து நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இதுதொடா்பாக வழக்கு விசாரணை நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கெங்காராஜ், மாரித்துரைக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.