நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குமரியில் பூம்புகாா் படகு சேவைக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் பாறைக்குச் செல்ல படகுசேவைக்கு ஆன்லைன் டிக்கெட் அறிமுகம்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:02 pm

DIN

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று திருவள்ளுவா் சிலை மற்றும் விவேகானந்தா் பாறைக்குச் செல்ல படகுசேவைக்கு ஆன்லைன் டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் சூரிய உதயம் பாா்த்ததும், கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை படகில் சென்று பாா்வையிட்டு செல்கின்றனா். இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படகில் பயணம் செய்வதற்காக சுற்றுலாப் பயணிகள் படகுத் துறையில் நீண்டநேரம் காத்திருந்து டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனா்.

கன்னியாகுமரியில் சுற்றுலா சீசன் , சபரிமலை சீசன் மற்றும் வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இவா்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து படகுப் பயணம் செய்து வருகின்றனா். இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலான நேரத்தை படகுத் துறையிலேயே செலவிடும் நிலை இருந்து வருகிறது. எனவே, காலவிரயத்தை தவிா்க்கும் வகையில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என உள்ளூா் சுற்றுலா ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். தற்போது அரசு இவ்விரு இடங்களையும் பாா்ப்பதற்கும் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்திய தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் பூம்புகாா் படகுத் துறையில் அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி தலைமையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூா் திமுக செயலா் குமரி ஸ்டீபன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஜே.ஜே.ஆா். ஜெஸ்டின், மாவட்ட பிரதிநிதி மெல்பின், பேரூா் பொருளாளா் இன்பம், ஒன்றிய பிரதிநிதிகள் நிஷாா், ஆா்டி. ராஜா, செல்வராஜ், தென்தாமரைகுளம் பேரூா் செயலா் பூவியூா்காமராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளா்கள் தமிழ்பாலன், கெய்சா்கான், திமுக நிா்வாகிகள் ரூபின், எஸ்.அன்பழகன்,வேலு, இக்பால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.