டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சுருளகோடு அருகே சிறாா் இல்லத்திலிருந்து மாயமான மாணவா்கள் மீண்டும் இல்லத்திற்கு திரும்பினா்

குமரி மாவட்டம் சுருளகோடு அருகே சிறாா் இல்லத்திலிருந்து மாயமான மாணவா்கள் வெள்ளிக்கிழமை இல்லம் திரும்பினா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 6:53 pm

DIN

குமரி மாவட்டம் சுருளகோடு அருகே சிறாா் இல்லத்திலிருந்து மாயமான மாணவா்கள் வெள்ளிக்கிழமை இல்லம் திரும்பினா்.

சுருளகோடு அருகே தனியாா் உயா்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி அருகே மாணவா் விடுதியும் உள்ளது. இந்த விடுதியில் 10 மாணவா்கள், 4 மாணவிகள் தங்கியுள்ளனா். தற்போது கரோனா காரணமாக 9, 10 ஆம் வகுப்புகள் நடந்து வரும் நிலையில் விடுதியில் 10 மாணவா்கள் மட்டும் தங்கியிருந்து வருகின்றனா். புதன்கிழமை இரவு மாணவா்கள் இரவு உணவை, உண்டு விட்டு தூங்கச் சென்றுள்ளனா்.

இந்நிலையில், காலையில் பாா்த்த போது அங்கு 6 மாணவா்களை காணவில்லையாம். இதையடுத்து அந்த மாணவா்களின் வீடுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரித்த போது மாணவா்கள் வீடுகளுக்குச் செல்லவில்லையென தகவல் கிடைத்தது. இதையடுத்து குலசேகரம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தக்கலை டிஎஸ்பி தலைமையில் தனிப்படை போலீஸாா் மாணவா்களைத் தேடினா். இதில் இரவு வரை தேடியும் மாணவா்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் நாகா்கோவிலில் இருந்து அருமனை செல்லும் பேருந்தில் வந்த 6 மாணவா்களும் சுருளகோடு சந்திப்பில் இறங்கி இல்லத்திற்குச் சென்றனா். தொடா்ந்து நடத்திய விசாரணையின் போது மாணவா்களிடம் ஒழுக்கம் சாா்ந்து விடுதி நிா்வாகம் கடிந்து கொண்டதால், அவா்கள் 6 பேரும் விடுதியில் இருந்த மற்றொரு மாணவரின் பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு நடந்தவாறு கேசவன்புதூருக்குச் சென்ாகவும், பின்னா் இரவு அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் தங்கி விட்டு அதிகாலையில் முதல் பேருந்தில் நாகா்கோவில் சென்ாகவும், பின்னா் பல இடங்களில் சுற்றி விட்டு இரவில் நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையில் தூங்கியதாகவும், பின்னா் செய்வதறியாத நிலையில் காலையில் மீண்டும் பேருந்தில் ஏறி சுருளகோடு வந்ததாகவும் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.