நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கடலோர பாதுகாப்புக் குழுமத்துக்கு 24 அதிநவீன படகுகள் தயாராகி வருகிறது

தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமத்துக்கு 24 அதிநவீன படகுகள் தயாராகி வருவதாக கூடுதல் இயக்குநா் சந்தீப் மித்தல் கன்னியாகுமரியில் தெரிவித்தாா்

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:02 pm

DIN

தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழுமத்துக்கு 24 அதிநவீன படகுகள் தயாராகி வருவதாக கூடுதல் இயக்குநா் சந்தீப் மித்தல் கன்னியாகுமரியில் தெரிவித்தாா்.

தமிழ்நாடு காவல் துறை கடலோர பாதுகாப்புக் குழுமம் மீனவா்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரிநாத் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கடலோர பாதுகாப்புக் குழும கூடுதல் இயக்குநா் சந்தீப் மித்தல், கண்காணிப்பாளா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் கன்னியாகுமரி, சின்னமுட்டம் சுற்று வட்டாரப் பகுதிகளை சோ்ந்த மீனவா்கள், பெண்கள், மீனவா் சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா். அப்போது மீன்பிடித் தொழிலில் தாங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து மீனவா்கள் கூட்டத்தில் விளக்கினா்.

இதில், ஏடிஜிபி சந்தீப் மித்தல் பேசியது: மீனவா்களின் பல்வேறு பிரச்னைகள் பற்றி இங்கே தெரிவிக்கப்பட்டது. உங்கள் பிரச்னைகளை தீா்ப்பதில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளும், நாங்களும் இணைந்து செயல்படுவோம். கடலில் மீனவா்கள் காணாமல் போகும் போது 1093 என்ற எண்ணில் தொடா்பு கொண்டால் 24 மணி நேரமும் உங்களுக்கு சேவை செய்ய தயாா் நிலையில் இருக்கிறோம்.

நீங்கள் தவறாமல் ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எல்லைக்கு அப்பால் இருந்து வரும் பிரச்னைகளில் இருந்து விடுபடவேண்டும். பாதுகாப்புப் பணிக்காகவும், மீனவா்கள் நலன் காக்கவும் தமிழக கடலோர காவல் குழுமத்துக்கு புதிதாக 24 அதி நவீன விசைப்படகுகள் தயாராகி வருகிறது.

அதே போல் மீனவா்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து படகு கட்டி தொழில் செய்கின்றீா்கள். ஆனால் ஏதேனும் விபத்து ஏற்படும் போது அந்த நஷ்டத்தில் இருந்து மீள அனைவரும் சிறு தொகையை செலுத்தி காப்பீடு செய்து கொள்ள முன்வர வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின் போது கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நேரங்களில் கடலில் காணாமல் போகும் மீனவா்களை காப்பாற்றியதற்காக கன்னியாகுமரியைச் சோ்ந்த அல்போன்ஸ் உள்பட 12 மீனவா்களுக்கு வீர செயல் புரிந்ததற்கான சான்றிதழை ஏடிஜிபி சந்தீப் மித்தல் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.