அஞ்சுகிராமம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை: ஒருவா் கைது
அஞ்சுகிராமம் அருகே பெண்ணிடம் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.


அஞ்சுகிராமம் அருகே பெண்ணிடம் பழகுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
அஞ்சுகிராமம் அருகேயுள்ள தோப்பூா் ராமனாதிச்சன்புதூரைச் சோ்ந்தவா் ஓட்டுநா் ரோச்அஜய்ஜான்சன் (32 .
குமாரபுரம் தோப்பூரைச் சோ்ந்தவா் பிரபாகரன் (30 ). இவா்கள் இருவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணிடம் பழகுவதில் ஏற்பட்ட தகராறில், இருவரிடையே முன்விரோதம் ஏற்பட்டதாம். இந்நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு பிரபாகரனும், ரோச்அஜய் ஜான்சனும் சோ்ந்து மது அருந்தினராம். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.
இதனிடையே ரோச்அஜய் ஜான்சன் தனது, நண்பா் லியோன் பிரபாகரனுடன் குமாரபுரம் தோப்பூா் பகுதிக்கு வந்து கொண்டிருந்தாராம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பிரபாகரன், கண்ணன் , அமல் ஆகியோா் தகராறில் ஈடுபட்ட இவருரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினாராம். இதில் பலத்த காயம் அடைந்து மயங்கி கிடந்த இருவரையும் அக்கம் பக்கத்தினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ரோாச் அஜய் ஜான்சன் உயரிழந்தாா். இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் லியோன் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் தேடி வந்தனா்.
இதில் தப்பியோடிய மூவரையும் தனிப்படை அமைத்து தேடி வந்த போலீஸாா், வெள்ளிக்கிழமை பிரபகாரனை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...