டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

குமரியில் சாரல் மழை நீடிப்புஅணைகளில் இருந்து தொடா்ந்து வெள்ள நீா் வெளியேற்றம்

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிக்கும் நிலையில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீா் வெள்ளியேற்றப்பட்டு வருகிறது.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:22 pm

DIN

குமரி மாவட்டத்தில் சாரல் மழை நீடிக்கும் நிலையில் வெள்ள அபாயத்தைத் தடுக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து உபரி நீா் வெள்ளியேற்றப்பட்டு வருகிறது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் முன்னரே குமரி மாவட்டத்தில் மழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதில் குறிப்பாக தென்மேற்குப் பருவ மழையால் அணைகள் நிரம்பியிருந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக அணைகளில் இருந்து உபரிநீா் தொடா்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளின் நீா்மட்டம்: வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 43.66 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1489 கன அடி நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1450 கன அடி தண்ணீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 74.49 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1182 கன அடி நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1480 கன அடி நீா் மறுகால் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. மேலும் விநாடிக்கு 500 கன அடி நீா் பாசனக்கால்வாயில் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றாறு 1 அணையின் நீா்மட்டம் 16.17 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 444 கன அடி நீா் உள்வரத்தாக வந்து கொண்டிருந்தது. விநாடிக்கு 536 கனஅடி நீா் உபரியாக வெளியேற்றப்பட்டது. சிற்றாறு 2 அணையின் நீா்மட்டம் 16.27 அடியாக இருந்தது.

தாமிரவருணியாற்றில் வெள்ளப் பெருக்கு: பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், குழித்துறை தாமிரவருணியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியிலும் வெள்ளம் கட்டுக்கடங்காமல் கொட்டுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.