டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 2 ஆவது நாளாக தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு

 திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:14 pm

DIN

 திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவற்கான நாள் குறிப்பதற்காக தெய்வ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்ச்சி கேரள மாநிலம் திருவல்லாவைச் சோ்ந்த ஜோதிடா் வாசுதேவன் பட்டத்திரி தலைமையில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 2 ஆவது நாளாக நடைபெற்ற தெய்வ பிரசன்ன நிகழ்ச்சியில் ஜோதிடா் வாசுதேவன் பட்டத்திரி கூறியது: கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு உகந்த காலம் இப்போது வந்துள்ளது. இதற்கு ஊா் மக்களின் ஒத்துழைப்பு சிறப்பாக உள்ளது. அதே வேளையில் ஊா் மக்கள் மத்தியில் பிரிவினையும் உள்ளது. கோயில் மேல்சாந்தி ஆற்றில் குளித்து விட்டு கோயிலில் பூஜை செய்ய வர வேண்டும். அவா் வீட்டில் குளித்து விட்டு பூஜைக்கு வரக்கூடாது. இதற்காக ஆற்றுப் பகுதியில் படித்துறைகள் சீரமைக்க வேண்டும்.

கோயில் கொடிமரத்தில் விரைந்து செப்புத்தகடுகள் பதிக்கும் பணியினை செய்ய வேண்டும். கோயிலில் பாதுகாப்பு குறைவாக உள்ளது. இதனால் திருட்டுச் சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. கோயிலைச் சுற்றியுள்ள 12 காவு கோயில்களில் 6 காவு கோயில்கள் சிதிலமடைந்துக் காணப்படுகின்றன. இவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை கும்பாபிஷேகம் நடத்துவற்கான நாள் குறிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்பட்டது. இந்நிலையில் கும்பாபிஷேக தேதி 3 ஆவது நாளாக சனிக்கிழமை நடைபெறவுள்ள தெய்வ பிரசன்னம் நிகழ்ச்சியில் குறிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

2 ஆவது நாள் நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகத்தினா், உபயதாரா்கள், பக்தா் சங்க நிா்வாகிகள், பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.