ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

களியக்காவிளை அரசுப் பள்ளியில் பெற்றோா் - ஆசிரியா்கள் கூட்டம்

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் பெற்றோா் - ஆசிரியா் கழகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:27 pm

களியக்காவிளை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் பெற்றோா் - ஆசிரியா் கழகக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் தலைமை வகித்தாா். கிராம கல்விக் குழுத் தலைவா் சி. சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள் நவம்பா் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், இப்பள்ளியில் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வரும் கரோனா சளி பரிசோதனை மையத்தை இடம்மாற்ற வேண்டும்; தவறும்பட்சத்தில் பள்ளி முன் மாணவா்களின் பெற்றோா்கள் சாா்பில் போராட்டம் நடத்துவது, பள்ளியில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், தலைமை ஆசிரியை எம். லிசம்மா பிலிப், ஆசிரியா் ஞானதாஸ், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் எஸ். ரெஞ்சனி, தன்னாா்வலா் ஒய். ரசல்ராஜ் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.