ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை (அக். 30) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Updated On :28 அக்டோபர் 2021, 7:52 pm

குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை (அக். 30) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து குழித்துறை துணை மின் நிலைய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழித்துறை துணை மின்நிலைய பகுதியில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலுவிளை, மேல்புறம், மருதங்கோடு, கோட்டவிளை, செம்மங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூா்சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிச்சல், பாலவிளை, பெருந்தெரு, பழவாா், விளவங்கோடு, கழுவன்திட்டை, குழித்துறை, இடைத்தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு சனிக்கிழமை (அக். 30) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இந்த நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும் மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணியும் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.