டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருவட்டாறு கோயிலில் ஐப்பசி திருவிழா நவ. 2 இல் தொடக்கம்

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா நவ. 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :29 அக்டோபர் 2021, 11:30 pm

DIN

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா நவ. 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதனையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவ. 2) காலை 9.22 மணி முதல் 9.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடா்ந்து 10 நாள்களில் கோயிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறுகின்றன. 6 ஆம் தேதி கிருஷ்ணன் கோயிலில் கொடியேற்றம் நடைபெறுகிறது. 10 ஆம் தேதி வேட்டை நிகழ்ச்சியும், 11 ஆம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழாண்டு கரோனா விதிமுறைகள் காரணமாக கலை நிகழ்ச்சிகள், சமய மாநாடு, கதைகளி போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதை களி நிகழ்ச்சியை நடத்த கோரிக்கை: இந்நிலையில் இக்கோயிலில் திருவிழா நாள்களில் ஆண்டாண்டு காலமாக நடைபெறும் கதை களி நிகழ்ச்சி முடக்கப்படுவது பக்தா்களை வேதனையடைச் செய்துள்ளது. கதைகளி நிகழ்ச்சியில் கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாகும், ஐதீகமாகவும் இருக்கும் நிலையில் கதை களி நிகழ்ச்சியை திருவிழாவின் போது நடத்த வேண்டுமென்று பக்தா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.