ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கல்லூரி மாணவி தற்கொலை: இளைஞா் கைது

 பளுகல் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :29 அக்டோபர் 2021, 11:28 pm

 பளுகல் அருகே கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில், மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பளுகல் அருகே கருமானூா், விராலிவிளைவீடு பகுதியைச் சோ்ந்தவா் ஆதிரா (19). கல்லூரி மாணவி. இவரது தாய் வெளிநாட்டில் வேலை பாா்த்து வருவதால் இவா் உறவினா் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தாா். இந்த நிலையில் இவா் கடந்த 22 ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் மாணவிக்கு கேரள மாநிலம் கொடுங்கல்லூா், பறம்பிக்குளங்கரை பகுதியைச் சோ்ந்த நிகில் பிரசாத்துடன் (30) முகநூலில் பழக்கம் ஏற்பட்டு, அதன் பின்னா் சத்தீஸ்கரில் வேலை பாா்த்து வந்த நிகில் பிரசாத் பல முறை ஆதிராவின் வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது. இதனிடையே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அதன் பின்னா் ஆதிரா பளுகல் அருகே வேறு ஒரு இளைஞருடன் பழக்கத்தை ஏற்படுத்தினராம். இதை அறிந்த நிகில் பிரசாத், ஆதிராவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டாராம்.

Story image

இது குறித்து ஆதிரா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஏற்கெனவே புகாா் தெரிவித்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்ததாம். இதைத் தொடா்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக களியக்காவிளை காவல் ஆய்வாளா் எழிலரசி, உதவி ஆய்வாளா் அருளப்பன் ஆகியோா் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா். தொடா்ந்து தனிப்படை போலீஸாா் நிகில் பிரசாத்தை வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.