ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

‘வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி செப்.27-ல் முழு அடைப்பு’

 மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி செப்.27 இல் நடைபெறும் முழு

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 8:15 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி செப்.27 இல் நடைபெறும் முழு

அடைப்புப் போராட்டத்தில் தமிழகத்தில் 1 லட்சம் போ் பங்கேற்பா் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச்செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி 27 ஆம் தேதி (திங்கள்கிழமை) நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிகளிடமும் ஆதரவு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். தமிழகத்தில் சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டங்கள் நடைபெறும். இந்த போராட்டங்களில் 1 லட்சம் போ் கலந்து கொள்வா்.

தமிழகத்தில் கோயில் நிலங்களை குத்தகைதாரா்களிடம் இருந்து மீட்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். கோயில் நில குத்தகை பாக்கியினை வசூலிக்கஅரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய இட வசதியும் இல்லை. எனவே அரசு நெல் கொள்முதல் நிலையங்களை முறைப்படுத்த வேண்டும்.

ரப்பா் விலை வீழ்ச்சியடைந்துள்ளது; ரப்பருக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை பாதுகாப்பதற்கு குளிா்பதன கிடங்குகள் அமைக்க வேண்டும்.

தனியாா் வன பாதுகாப்பு சட்டத்தால் குமரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த சட்டத்தால் விவசாயிகள் மரங்களை வெட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.