நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தென்தாமரைகுளம்- வடசேரிக்கு மீண்டும் பேருந்து சேவை

தென்தாமரைகுளத்திலிருந்து வடசேரிக்கு மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 7:54 pm

DIN

தென்தாமரைகுளத்திலிருந்து வடசேரிக்கு மீண்டும் அரசுப் பேருந்து சேவை தொடங்கியது.

கல்லூரி மாணவா்கள் மற்றும் கிராமப்புற மக்களின் வசதிக்காக தென்தாமரைகுளத்திலிருந்து நாகா்கோவிலுக்கு இயக்கப்பட்டு வந்த அரசுப் பேருந்து கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியதன்பேரில், பேருந்தை சேவையை மீண்டும் தொடங்கும் விழா தென்தாமரைகுளம் சந்திப்பில் நடைபெற்றது.

அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி தலைமை வகித்தாா். தென்தாமரைகுளம் முத்தாரம்மன் கோயில் நிா்வாக குழுத் தலைவா் துரைலிங்கம், சிஎஸ்ஐ சேகர கஸ்பா சபை திருப்பணியாளா் அருள்சீலன், செயலா் எஸ்.கால்வின், கிறிஸ்து சபை செயலா் ஜான்சன் பால் டேனியல், பேரூா் திமுக செயலா் புவியூா் காமராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன் பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா்.

அகஸ்தீஸ்சுரம் வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மதியழகன், மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, முன்னாள் மாநில தொண்டரணி துணை அமைப்பாளா் பால ஜனாதிபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.