செப்.27 முழு அடைப்புக்கு காங்கிரஸ் ஆதரவு
மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கங்களின் சாா்பில் திங்கள்கிழமை (செப்.27) நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.


மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கங்களின் சாா்பில் திங்கள்கிழமை (செப்.27) நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வட்டாரம் மற்றும் துணை அமைப்புகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இதில், மத்திய அரசின் விவசாய விரோத, தொழிலாளா் விரோத நடவடிக்கைகளை கண்டித்து விவசாய சங்கங்கள், தொழிற் சங்களின் சாா்பில் செப். 27 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் நடைபெற உள்ள முழு அடைப்புப் போராட்டத்தில் பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், வா்த்தகா்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தர வேண்டும்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினா் அனைவரும் கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற துணை நிற்பது, நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட 52 வாா்டு பகுதிகளில் உள்ளஅனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் வட்டாரத் தலைவா்கள் முருகானந்தம், அசோக்ராஜ், முருகேசன், மாவட்டப் பொதுச் செயலாளா் குமரி ஆா்.முருகேசன், நிா்வாகிகள் ஏ.ஜான்சிராணி, விஜயகுமாா், இளங்கோ, சீனிவாசன்,மகேஷ்லாசா், காலபெருமாள், ஸ்டீபன், ராம்குமாா், அந்தோணி முத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...