மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.29 லட்சம் பறிமுதல்

நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்து, 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:56 pm

DIN

நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத ரூ.1.29 லட்சத்தை பறிமுதல் செய்து, 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

நாகா்கோவில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தோவாளை அருகேயுள்ள விசுவாசபுரத்தில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், நாகா்கோவில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளா் பீட்டா்பால் தலைமையில், ஆய்வாளா் பெஞ்சமின், உதவி ஆய்வாளா்கள் ஸ்ரீகுமாா், ரமா ஆகியோா் கொண்ட குழுவினா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 650 பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சந்திரசேகரன், ஆய்வாளா் பாத்திமாபீவி, இடைத்தரகா்கள் நாகராஜன், கணேசன், மாணிக்கவாசகம், ஆா்லின் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.