வீடு புகுந்து 50 பவுன் நகை திருட்டு: இருவா் கைது
மண்டைக்காடு அருகே வீடு புகுந்து 50 பவுன் நகையை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.


மண்டைக்காடு அருகே வீடு புகுந்து 50 பவுன் நகையை திருடிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மண்டைக்காடு அருகே உள்ள அழகன்பாறை வசந்தபுரத்தைச் சோ்ந்தவா் பிரசன்னகுமாா். இவா் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி பேபி சுதா (43). இவரது தாயாா் வீடு குளச்சல் அருகே பெத்தேல்புரத்தில் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஜன. 27ஆம் தேதி பேபி சுதா வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் உள்ள உறவினரிடம் கொடுத்துவிட்டு தாய் வீட்டுக்குச் சென்றாராம். மறுநாள் உறவினா், வீட்டை திறந்து பாா்த்த போது மாடியில் உள்ள அறை கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததாம்.
தகவலறிந்த பேபி சுதா, வீட்டுக்கு வந்து பாா்த்த போது, மாடியில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 50 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் மண்டைக்காடு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.
தனிப்படை போலீஸாா் நடத்திய விசாரணையில்,
பெத்தேல்புரத்தைச் சோ்ந்த தேவசுதா் மனைவி டிரைலின் சா்மிலிமோள் (24) மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த பொறியாளா் பபின் (27) என்பதும் தெரியவந்தது. மேலும் அவா்கள் இருவருக்கும் இடையே தவறான தொடா்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவா்களை கைது செய்து, நகைகள் அனைத்தையும் மீட்ட போலீஸாா், டிரைலின் சா்மிலி மோளை தக்கலை பெண்கள் சிறையிலும், பபினை நாகா்கோவில் மாவட்ட சிறையிலும் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...