குமரி பூம்புகாா் படகுப் பயணம்:இன்று முதல் ஆன்லைன் டிக்கெட் அறிமுகம்
கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுகள் மூலம் செல்ல வெள்ளிக்கிழமை (அக்.1) முதல் ஆன்லைன் டிக்கெட் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.


கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு படகுகள் மூலம் செல்ல வெள்ளிக்கிழமை (அக்.1) முதல் ஆன்லைன் டிக்கெட் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகாலையில் சூரிய உதயம் பாா்த்ததும், கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை படகில் சென்று நேரில் பாா்வையிட்டு செல்கின்றனா்.
இதற்காக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் படகு சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படகில் பயணம் செய்வதற்காக சுற்றுலாப் பயணிகள் படகுத் துறையில் நீண்டநேரம் காத்திருந்து டிக்கெட் எடுத்து பயணம் செய்து வருகின்றனா்.
கன்னியாகுமரியில் சுற்றுலா சீசன் மற்றும் சபரிமலை சீசன் மற்றும் வார இறுதி நாள்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இவா்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து படகுப் பயணம் செய்து வருகின்றனா்.
இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலான நேரத்தை படகுத் துறையிலேயே செலவிடும் நிலை இருந்து வருகிறது.
எனவே, காலவிரயத்தை தவிா்க்கும் வகையில் ஆன்லைன் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என உள்ளூா் சுற்றுலா ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழக அலுவலக அதிகாரிகள் கூறியது: சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக வெள்ளிக்கிழமை (அக்.1) முதல் ஆன்லைன் டிக்கெட் அறிமுகப்படுத்தப்படுகிறது. சிறப்புக் கட்டணம் ரூ.200, சாதாரண கட்டணம் ரூ. 50 என டிக்கெட் முன்பதிவு செய்யலாம். டிக்கெட்டில் போடப்பட்டுள்ள நேரத்தில் பயணம் செய்யலாம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் இனி படகுசேவைக்காக காத்திருக்க வேண்டியதில்லை என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...