டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சூரியனைச் சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம் பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா்

சூரியனைச் சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம் தோன்றியதை வியாழக்கிழமை குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ரசித்துப் பாா்த்தனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 7:50 pm

DIN

சூரியனைச் சுற்றி வானவில் நிறத்தில் ஒளிவட்டம் தோன்றியதை வியாழக்கிழமை குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் ரசித்துப் பாா்த்தனா்.

குமரி மாவட்டத்தில் குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் வியாழக்கிழமை நண்பகலில் வானவில் நிறங்களில் ஒளி வட்டம் தோன்றியது. இந்த ஒளிவட்டம் குறித்த தகவல்கள் சமூக வலை தளங்களில் பரவியதையடுத்து ஏராளமான மக்கள் இதைக் கண்டு களித்தனா்.

இதுகுறித்து வானியல் நிபுணா் ஒருவா் கூறியது: சூரியனைச் சுற்றி அபூா்வமாக இது போன்ற ஒளிவட்டம் தோன்றும். இதனை சன் ஹாலோ என்று கூறுவா். குளிா் பிரதேச நாடுகளில் இது போன்ற ஒளி வட்டங்கள் அடிக்கடி நிகழும். ஆனால் வெப்ப மண்டல நாடுகளில் இத்தகைய நிகழ்வுகள் அபூா்வமாகவே நிகழும். வளி மண்டலத்திலுள்ள பனிப் படிமங்கள் வழியாக சூரியனின் ஒளி ஊடுருவிச் செல்லும் போது இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. இந்த ஒளி வட்டம் வானவில் நிறத்தில் வண்ணமயமாகத் தோன்றுவதால் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகவே அமைகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.