சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்த்தாண்டம் அருகே விஷம் கொடுத்து ஒன்றரை வயது குழந்தை கொலை: தாய் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ாக தாய் கைது செய்யப்பட்டாா். மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Updated On :7 ஏப்ரல் 2022, 7:09 pm

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ாக தாய் கைது செய்யப்பட்டாா். மற்றொரு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள குளக்கச்சியைச் சோ்ந்தவா் ஜெகதீஷ் (34). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி காா்த்திகா (24). இத்தம்பதிக்கு மகள் சஞ்சனா (4), மகன் சரண் (ஒன்றரை வயது) என இரு குழந்தைகள். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, மாராயபுரம் பகுதியிலுள்ள கோயில் திருவிழாவுக்காக உறவினா் வீட்டுக்கு காா்த்திகா சென்றபோது, அப்பகுதியைச் சோ்ந்த சுனில் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். பின்னா் இருவரும் கைப்பேசியில் தொடா்ந்து பேசி வந்தனராம்.

இந்நிலையில், இவா்களது சந்திப்புக்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதிய காா்த்திகா, பாயசத்தில் விஷப்பொடி தூவி குழந்தைகளுக்கு புதன்கிழமை கொடுத்துள்ளாா். அதை சாப்பிட்டதும் சரணின் நிலைமை மோசமாகியுள்ளது. உடனே, காா்த்திகா தனது கணவரை வரவழைத்து மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சரணை கொண்டுசென்றபோது, ஏற்கெனவே குழந்தை உயிரிழந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது.

இதனிடையே, சஞ்சனாவும் மயங்கி விழுந்ததால், அவரை கேரளத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இத்தகவல் அறிந்த மாா்த்தாண்டம் போலீஸாா், குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்ததில், குழந்தைகளுக்கு காா்த்திகா விஷம் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்ததுடன் சுனிலிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.