சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அதிக பாரம்: 2 லாரிகள் பறிமுதல்

குழித்துறையிலிருந்து கேரளத்துக்கு அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 டாரஸ் லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :21 ஏப்ரல் 2022, 7:40 pm

குழித்துறையிலிருந்து கேரளத்துக்கு அதிக பாரம் ஏற்றிச்சென்ற 2 டாரஸ் லாரிகளை வருவாய்த் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். லாரிகளுக்கு போக்குவரத்து அதிகாரிகள் ரூ. 85 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

விளவங்கோடு வட்டாட்சியா் ரமேஷ்பாபு தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் குழித்துறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கா்நாடக, கேரளப் பதிவெண்களைக் கொண்ட 2 டாரஸ் லாரிகள் பாறைப்பொடி, பாறைக் கற்கள் ஏற்றிக்கொண்டு அவ்வழியே வந்தன. அவற்றை நிறுத்தி, ஆவணங்களை சோதனையிட்டபோது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றிக்கொண்டு கேரளத்துக்கு செல்வது தெரிந்தது. இரு லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனா். அந்த லாரிகளுக்கு

மாா்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ராஜேஷ் தலைமையிலான அதிகாரிகள் ரூ. 85 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.