சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாலைக்கோட்டில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கு

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்கக் கல்லூரியின் சமூகப் பணித் துறை, கன்னியாகுமரி சமூக சேவை சங்கம் இணைந்து மாலைக்கோடு புனித திருச்சிலுவை தேவாலய வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கை நடத்தின.

Updated On :21 ஏப்ரல் 2022, 7:39 pm

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்கக் கல்லூரியின் சமூகப் பணித் துறை, கன்னியாகுமரி சமூக சேவை சங்கம் இணைந்து மாலைக்கோடு புனித திருச்சிலுவை தேவாலய வளாகத்தில் புற்றுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கை நடத்தின.

சமூகப் பணித் துறைத் தலைவா் மேரி பெல்சிட் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் ஸ்ரீராம் புற்றுநோய் அறக்கட்டளை நிா்வாகி செந்தில்குமாா் கலந்துகொண்டு, புற்றுநோயின் தாக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.

கன்னியாகுமரி சமூக சேவை சங்கத்தின் அலுவலகப் பணியாளா் நிஷா, ஸ்ரீராம் புற்றுநோய் அறக்கட்டளை செவிலியா்கள், மாணவியா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை சமூகப் பணித் துறை மாணவியா் கி. கீா்த்தனா கிறிஸ்டோபா், வி.ஜெ. ஜெனிஷா, ரா. ரஷ்மிதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா். மாணவி ஜெனிஷா வரவேற்றாா். மாணவி ரஷ்மிதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.