ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குடிநீா் திட்டப் பணியில் சேதமுற்ற சாலையைச் சீரமைக்கக் கோரி மறியல் முயற்சி

கூட்டுக்குடித் திட்டப் பணியின்போது சேதமுற்ற சாலையைச் சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:40 pm

DIN

கூட்டுக்குடித் திட்டப் பணியின்போது சேதமுற்ற சாலையைச் சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

கூட்டுக்குடிநீா் திட்ட குழாய் பதிக்க களியல்- அழகியபாண்டியபுரம் சாலையில் கடந்த 2019இல் பள்ளம் தோண்டப்பட்டதில் சாலை சேதமுற்றன. அதில், உண்ணியூா்கோணம்- களியல் வரையிலான சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், மக்களும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனா்.

இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி திற்பரப்பு-களியல் இடையே மறியல் போராட்டம் நடத்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை திரண்டனா். திற்பரப்பு பேரூராட்சி 1ஆம் வாா்டு உறுப்பினா் கிருஷ்ணவேணி தலைமையில் கிளைச் செயலா் சதீஷ், திற்பரப்பு கூட்டுறவு வங்கி உறுப்பினா் ஜோதிா்மயன் ஆகியோா் முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சேகா், வட்டாரச் செயலா் விஸ்வம்பரன், திற்பரப்பு கூட்டுறவு வங்கித் தலைவா் ஜூடஸ் குமாா், வட்டாரக் குழு உறுப்பினா்கள் சிவகுமாா், ஸ்ரீகுமாா் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

அவா்களிடம் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் தனேஷ், குலசேகரம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சுதேசன் ஆகியோா் பேச்சு நடத்தி, சாலையை தற்காலிகமாக சீரமைத்து, உறுதித்தன்மை ஏற்பட்டவுடன் தாா் போடப்படும் என உறுதி அளித்தனா். மேலும், பொக்லைன் இயந்திரம் உதவியுடன் சாலை சீரமைப்புப் பணி உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.