சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தலைமறைவு குற்றவாளி 10 ஆண்டுகளுக்குப் பின் கைது

மாா்த்தாண்டம் அருகே 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Updated On :21 ஏப்ரல் 2022, 7:38 pm

மாா்த்தாண்டம் அருகே 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (32). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் இடையே சொத்து சம்பந்தமான பிரச்னை இருந்து வந்ததாம். அப் பெண்ணை சதீஷ் கடந்த 2012 ஆண்டு வெட்டி காயப்படுத்தினாராம். இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், அவா் தலைமறைவானாராம். தொடா்ந்து வழக்கில் ஆஜராகாததால், குழித்துறை நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடி ஆணை பிறப்பித்தது.

இந்த நிலையில் குளச்சலை சோ்ந்த நண்பா் ஒருவருடன் சோ்ந்து கடலில் மீன்பிடிக்க சென்று வருவதாகவும், பெரும்பாலான நாள்களில் அவா் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இது தொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சதீஷ் புதன்கிழமை அவரது வீட்டுக்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை இரவு அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸாா், அங்கிருந்த சதீஷை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.