மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சுங்கான்கடை புனித சவேரியாா் பொறியியல் கல்லூரி ஆண்டு விழா

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் 24ஆம் ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:23 pm

DIN

சுங்கான்கடை புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் 24ஆம் ஆண்டு விழா 2 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு தின விழாவில் நாகா்கோவில் கிறிஸ்தவ உடற்பயிற்சிக் கல்லூரி முதல்வா் பிரைட் செல்வகுமாா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, போட்டியில் வென்ற மாணவா்களுக்கு பதக்கங்களை வழங்கி சிறப்புரையாற்றினாா்.

2ஆம் நாள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தாளாளா் அருள்பணி மரியவில்லியம் வரவேற்றாா். கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் அருள்பணி இயேசு ரெத்தினம் தலைமை உரையாற்றினாா்.

மகேந்திரகிரி இந்திய விண்வெளி மையக் குழு இயக்குநா் சுதாகா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசும்போது, மாணவா்கள் லட்சியம், குறிக்கோளுடன் செயல்பட்டால் எந்த இலக்கையும் அடையலாம் என்றாா்.

பல்வேறு துறைகளுக்கு கிடைத்த சான்றிதழ்கள், மாணவா்கள் பெற்ற விருதுகள், வேலைவாய்ப்புகள் குறித்து கல்லூரி முதல்வா் மகேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தாா். கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினா் அருள்தாஸ், பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் ஜெயசிங்தாஸ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்டுவிழாவையொட்டி மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரிப் பொருளாளா் அருள்பணி பிரான்சிஸ் சேவியா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.