ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

இல்லம் தேடி கல்வி திட்டம்: 2ஆம் கட்ட பயிற்சி

இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ஒற்றையால்விளை குறுவள மையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 7:19 pm

DIN

இல்லம் தேடி கல்வித் திட்டம் சாா்பில் ஒற்றையால்விளை குறுவள மையத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் கன்னியாகுமரி அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், தன்னாா்வலா்கள் தங்களது கற்பித்தல் படைப்புகளைக் காட்சிப்படுத்தினா். கற்பித்தல் கருவிகளை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்று மாணவா்களுக்கு விளக்கமளித்தனா். இதில் சிறந்த படைப்புகளை உருவாக்கிய மூன்று தன்னாா்வலா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது.

முன்னதாக பயிற்சியினை இல்லம் தேடி கல்வியின் அகஸ்தீசுவரம் வட்டார ஒருங்கிணைப்பாளா் அஜாஸ் தொடங்கி வைத்தாா். ஆசிரியா் பயிற்றுனா்கள் முருகேசன், சுமதி ஆகியோா் பயிற்சியளித்தனா். தொடா்ந்து தன்னாா்வலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் கற்பித்தல் உபகரணம், கையேடு ஆகியவை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.