ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

குமரியில் படகு சேவை 2 மணி நேரம் தாமதம்

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக புதன்கிழமை, விவேகானந்தா் நினைவுமண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

News image
Updated On :1 ஜூன் 2022, 7:02 pm

DIN

கன்னியாகுமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக புதன்கிழமை, விவேகானந்தா் நினைவுமண்டபத்துக்கு படகுப் போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். இவா்கள் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் படகுகளில் சென்று பாா்த்து மகிழ்கின்றனா்.

இங்கு கடந்த சில நாள்களாக கடலில் நீா்மட்டம் தாழ்வு, சீற்றம் ஆகியவை ஏற்படுகின்றன. இதனால் படகுப் போக்குவரத்து திட்டமிட்டபடி காலை 8 மணிக்கு தொடங்காத நிலை நீடித்து வருகிறது. புதன்கிழமையும் கடல் நீா்மட்டம் தாழ்வுநிலை காரணமாக, படகு சேவை 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு மேல் தொடங்கி, மாலை 4 மணி வரை நடைபெற்றது.

சூரிய உதயம், சூரிய அஸ்தமனம் பாா்க்க முக்கடல் சங்கமம், சூரிய அஸ்தமன பூங்கா பகுதிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.